தமிழக தேர்தல் பணிக்கான 3ம் கட்ட பயிற்சி வகுப்புகள் – தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளுக்கான 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பல முன்னணி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் ஆணையமும் விரைவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளுக்கான அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
இந்த ஆண்டு தேர்தலில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி நான்கு கட்டங்களாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல் பணிக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்கு பெட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என பயிற்சி வழங்கப்படுகிறது.
மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காலவரையின்றி நீட்டிப்பு – DME அறிக்கை!!
தமிழகம் முழுவதும் நாளை (3.04.2021) தேர்தல் பணிக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கான தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை காரணமாக தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
நாளை மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகளில் போது தபால் ஓட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பயிற்சி நடைபெறும் இடம் அல்லது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.