
மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டி!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் அந்த கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார்.
கட்சி வேட்பாளர்கள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த புதன்கிழமை அன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, மதுரவாயல்- பத்ம ப்ரியா, மாதவரம்- ரமேஷ் கொண்டலசாமி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி- ஃபாசில், எழும்பூர்- பிரியதர்ஷினி, திருப்போரூர்- லாவண்யா, பரமக்குடி- கருப்புராஜ், வில்லிவாக்கம்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, அண்ணா நகர்- பொன்ராஜ், விருகம்பாக்கம்- கவிஞர் சினேகன்,
1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் – இன்று முதல் தொடக்கம்!!
பெரம்பூர்- பொன்னுசாமி, சைதாப்பேட்டை- சினேகா மோகன்தாஸ், பல்லாவரம்- செந்தில் ஆறுமுகம், தாம்பரம்- சிவ இளங்கோ, காஞ்சிபுரம்- கோபிநாத், ஓசூர்- மசூத், பாலக்கோடு- ராஜசேகர், பென்னாகரம்- ஷகிலா, திருவண்ணாமலை- அருள், செய்யாறு- மயில்வாகணன், ஓமலூர்- சீனிவாசன், மேட்டூர்- அனுஷியா, நாமக்கல்- ஆதம் ஃபரூக், குமாரபாளையம்- காமராஜ், ஈரோடு (கிழக்கு)- ராஜ்குமார், உதகை- சுரேஷ் பாபு, குன்னூர்- ராஜ்குமார், கூடலூர்- பாபு, மேட்டுப்பாளையம்- லட்சுமி, அவிநாசி- வெங்கடேஷ்,
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு!!
திருப்பூர் (வடக்கு)- சிவபாலன், திருப்பூர் (தெற்கு)- அனுஷியா ரவி, பல்லடம்- மயில்சாமி, வால்பாறை- செந்தில்ராஜ், பழனி- பூவேந்தன், திண்டுக்கல்- ராஜேந்திரன், அரவக்குறிச்சி- முகம்மது அனீஷ் ஷைல், திருச்சி (கிழக்கு)- வீரசக்தி, திருவெறும்பூர்- முருகானந்தம், முசிறி- கோகுல், துறையூர்- யுவராஜ், குன்னம்- சாதிக் பாட்ஷா, பண்ருட்டி- ஜெயலானி, மயிலாடுதுறை- ரவிச்சந்திரன், நாகை- அனாஸ், விராலிமலை- சரவணன் ராமநாதன்,
தமிழகத்தில் ஆடிட்டர் படிப்புகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
புதுக்கோட்டை- மூர்த்தி, காரைக்குடி- ராஜ்குமார், சோழவந்தான்- யோகநாதன், மதுரை (மேற்கு)- முத்துக்கிருஷ்ணன், ஆண்டிப்பட்டி- குணசேகரன், போடி- கணேஷ், கம்பம்- வேதா வெங்கடேஷ், அருப்புக்கோட்டை- உமாதேவி, மொடக்குறிச்சி- ஆனந்தம் ராஜேஷ், ஈரோடு (மேற்கு)- துரை சேவகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தற்போது இன்று இரண்டாம் கட்ட போட்டியாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயதை உயர்த்திய அரசாணை எதிர்த்து வழக்கு !
கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தி.நகர் – பழ.கருப்பையா, மயிலாப்பூர் – ஸ்ரீபிரியா,ஆலந்தூர் – சரத்பாபு,சிங்காநல்லூர் – மகேந்திரன், எடப்பாடி தொகுதி – தாசப்பராஜ், வேளச்சேரி – சந்தோஷ் பாபு,கன்னியாக்குமரி – சுபா சார்லஸ் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.