நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!

0
நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!
நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!
நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே அவற்றின் மீது சிறப்பு கவனம் மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வழக்குகள்:

தமிழகத்தில் 9000-க்கு அதிகமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக அலட்சியம் காட்டுவதால், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதோடு நிர்வாகத்திலும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகல்வித்துறைக்கு எதிராக இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணிநியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அலட்சியம் காட்டுவதால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையில் அலுவலர்கள் முறையாக கொடுக்கப்பட்ட பணிகளை செய்யாமல், நேரம் கடந்து செய்வது, சிலர் கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல் போவது போன்ற அலட்சியமான செயல்கள் தான் இந்த வழக்குகளுக்கு காரணம்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

அலுவலர்கள் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வழக்குகளை தனது கடமைகளை தாமதமின்றி செய்ய வேண்டும். சட்டம், விதிகள் அரசாணை மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு நீதிமன்றம் வழங்கும் ஆணைகளை செய்ய வேண்டும். ஒரு வழக்கில் அதிக அலுவலர்கள் குற்றம் சாட்டப்பாட்டால் அந்த வழக்கு தொடர்பாக எந்த அலுவலர் ஆணை மற்றும் செயல்முறை தேவைப்படுகிறதோ அவர் அந்த பணியை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதனை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

இந்த சுற்றறிக்கையை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!