தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

0
தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவு காரணாமாக இன்று காலமானார். அவருக்கு வயது 76 ஆகும். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசையின் தாயார்:

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டது முதல், தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அப்பதவியில் நியமனம் செய்யப்பட்டார். மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தனது வாழ்க்கையை துவங்கியவர், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க.,வில் இணைந்தார்.

India Yamaha Motor நிறுவனத்தில் ரூ.14,000/- உதவித்தொகையுடன் வேலை!

இவரது தந்தை குமரி அனந்தன் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கிய பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்டவர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆவார். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள் – ‘நமது நண்பன்’ என்று சொல்லப்படும் நிழலும் இன்றைக்கு தெரியாது!

இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர், அரசியல்வாதி என புகழ்பெற்ற நிலையில் தற்போது ஆளுநராக வலம் வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் தமிழிசை அவர்களுடன் வசித்து வந்த தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!