இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
இந்திய அஞ்சல் துறையில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் Mail Motor Service ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் Staff Car/ MMS Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
பணியின் பெயர் | Staff Car Drivers |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
Staff Car/ MMS Driver பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
India Post கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு முன்னர் Dispatch Rider தகுதியில் பணிபுரிந்தவராகவும், பணியில் நல்ல அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
- இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Motor mechanism பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
India Post ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.24,500/- (Level 2 7th CPC Matrix) வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது .
Driver தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.