விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – இந்த வார TRP ரேட்டிங்!
ஒவ்வொரு வாரமும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் தொடர்களில் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் உள்ளது என கணக்கெடுக்கப்படும். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் விஜய் டிவி சீரியல்கள் முதல் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அதை சன் டிவி முறியடித்துள்ளது.
விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி :
தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் மெட்டி ஒலி, சித்தி, திருமதி செல்வம் என பல ஹிட் சீரியல்கள் ஓடிய பெருமை சன் டிவிக்கு சேரும். சீரியல் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வரும் நிலையில் வாரா வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ரேட்டிங் விவரம் வெளியாகும். அதில் எப்போதுமே நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தான் அதிகம் இடம்பெறும். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல் தான் முதல் இடங்களில் வரும் சன் டிவி தொடர் எப்பொழுதும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கும்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இன்றைய எபிசோட்டில் நடந்த சிறப்பான சம்பவம் – ரசிகர்கள் ஷாக்!
மேலும், விஜய் டிவி சின்னத்திரை நடிகை, நடிகர் என்றாலே தனி மதிப்பு தான். ஏனென்றால் அவர்கள் நடிக்கும் கதைகள் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்விதமாக ஒவ்வொரு வாரமும் டாப் 5 ரேட்டிங்கில் விஜய் டிவி தொடர்களே இடம்பெறும். ஆனால்,கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவி தொடர் அரைத்த மாவையே அரைத்து மக்களை போர் அடித்துள்ளதால் மற்றும் சன் டிவியில் புதிதாக ஆரம்பமாகிய கயல் சீரியல் சன் தொலைக்காட்சியின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் வகையில் சூப்பர் ஹிட் கொடுத்து முதலிடத்தை பெற்று வருகிறது.
இந்த வார TRP ரேட்டிங்கிழும் சன் டிவி கயல் சீரியல் நாயகி கயலின் திருமண டிராக் ஒளிபரப்பாகி மக்களிடத்தில் அதிக ரீச் கிடைத்து முதலிடத்தை பெற்றுள்ளது.
- முதல் இடம் – கயல்
- இரண்டாவது இடம் – பாக்கியலட்சுமி
- மூன்றாவது இடம் – சுந்தரி
- நான்காவது இடம் – பாரதி கண்ணம்மா
- ஐந்தாவது இடம் – பாண்டியன் ஸ்டோர்ஸ்
இவ்வாறு ஒவ்வொரு வாரமும் சன் டிவி முதலிடத்தை பெற்று விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி வருகிறது.