தமிழில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் சீரியல்.. அடுத்த பாரதி கண்ணம்மா போலயே – களமிறங்கும் பிரபல நடிகர்!
தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்க இருக்கும் புதிய நெடுந்தொடர் குறித்த சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின் கார்த்திக் ராஜ் நடிக்க இருக்கும் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
புதிய சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் நடித்த ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் டாப் சீரியல் வரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அவர் சீரியல் குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீரியலை விட்டு விலகினார். அதன் பின் அவரை எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கார்த்திக் ராஜ் தற்போது ஜீ தமிழில் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அந்த சீரியல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ஜீ தெலுங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கிருஷ்ண துளசி சீரியலின் ரிமேக் தொடரில் தான் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் உண்மையான கதையின் படி, ஹீரோ பெரிய பணக்காரர் போல காட்டப்படுவார். மேலும் கதாநாயகி கிருஷ்ணனின் தீவிர பக்தையாக காட்டப்படுவார். மேலும் ஹீரோயின் கருப்பாக இருப்பது போல காட்டப்படும்.
ஆடல், பாடல், நடிப்புடன் தொடங்கிய BB TALENT ஷோ.. கலக்கும் போட்டியாளர்கள் – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
அதே போல தான் தற்போது கார்த்திக் ராஜ் நடிக்க இருக்கும் சீரியல் கதை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஏற்கனவே கருப்பு நிறத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலாக இருக்கும் நிலையில், இந்த சீரியலும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஜோடியாக புதுமுக நடிகை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.