ஆடல், பாடல், நடிப்புடன் தொடங்கிய BB TALENT ஷோ.. கலக்கும் போட்டியாளர்கள் – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

0
ஆடல், பாடல், நடிப்புடன் தொடங்கிய BB TALENT ஷோ.. கலக்கும் போட்டியாளர்கள் -
ஆடல், பாடல், நடிப்புடன் தொடங்கிய BB TALENT ஷோ.. கலக்கும் போட்டியாளர்கள் - "பிக்பாஸ்" முதல் ப்ரோமோ!
ஆடல், பாடல், நடிப்புடன் தொடங்கிய BB TALENT ஷோ.. கலக்கும் போட்டியாளர்கள் – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்மந்தமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவது போல காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 25 நாட்கள் முடிவடைந்துள்ளது. முதல் வாரத்தில் 21 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அதில் மூவர் வெளியேறி தற்போது 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுமையான டாஸ்க் எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் புதுவிதமான டாஸ்குகள் வழங்கப்படுகின்றன. அதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் வீட்டின் ஹவுஸ்மெட்ஸ் இரண்டு டிவி சேனல்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த டிவி, இந்த டிவி என பிரிக்கப்பட்ட நிலையில் பல நிகழ்ச்சிகளை போட்டியாளர்கள் முழு பங்களிப்பையும் கொடுத்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோட் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்ட BB TALENT ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – யாரும் எதிர்பார்க்காத Eviction!

Follow our Instagram for more Latest Updates

போட்டியாளர்கள் தங்களுடைய ஆடல், பாடல் நடிப்பு திறமையை இந்த ஷோ மூலமாக காட்டலாம். அந்த வகையில் ஜனனி ஒரு பாடலுக்கு நடனம் ஆட, ஷெரினாவும், ஷிவின் பேஷன் ஷோவில் நடப்பது போல நடந்து காட்டுகின்றனர். மேலும் விக்ரமன் ஒரு நாடகம் ஒன்றில் நடித்து காட்டுகிறார். அது மட்டுமில்லாமல் அமுதவாணன் பெரிய வசனம் பேசி தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார். அதனால் இன்றைய எபிசோட் உற்சாகத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!