Tamil Nadu Urban Local Body Election Results | நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம் – ஒரு பார்வை!

0
Tamil Nadu Urban Local Body Election Results | நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம் - ஒரு பார்வை!
Tamil Nadu Urban Local Body Election Results | நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம் - ஒரு பார்வை!
Tamil Nadu Urban Local Body Election Results | நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம் – ஒரு பார்வை!

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலைநேர நிலவரப்படி முன்னனியில் உள்ள கட்சிகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வாக்கு எண்ணிக்கை:

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் இந்த பதவிகள் அனைத்தும் காலியாக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சி தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புதிதாக பதவி ஏற்ற திமுக தலைமையிலான அரசு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டியது. அதன்படி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதியான இன்று நடத்தப்படும் என்று முன்னதாவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு, கொரோனா காலத்திலும் கூட இதற்காக தீவிரமாக உழைத்து வந்தனர். மேலும் நகர்புறங்களில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை கூறியும் வாக்கு சேகரித்து வந்தனர்.

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறதா முழு ஊரடங்கு? பரவி வரும் புதிய வைரஸ்! பொதுமக்கள் அச்சம்!

இன்று காலை தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் 9:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 49 நகராட்சிகளில் முன்னிலை நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி, திமுக 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அதிமுக 6 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும், 1 இடத்தில் பாமகவும் முன்னிலையில் உள்ளது. இவையன்றி பாஜக, நாதக, மநீம, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் எங்கும் முன்னிலையில் இல்லை. இனி அடுத்தடுத்து முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடப்பதை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!