மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை குறித்த மிகப்பெரிய அப்டேட் வெளியாக இருக்கும் நிலையில், இதன் மூலம் சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

நீண்ட காலமாக அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 18, 2022 அன்று ஹோலி பண்டிகைக்கு முன்னதாக நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 3% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இத்தொகை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள ஒரு அறிக்கையின்படி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதத்தில் முழு சம்பளம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறதா முழு ஊரடங்கு? பரவி வரும் புதிய வைரஸ்! பொதுமக்கள் அச்சம்!

இதில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் அடங்கும். இதற்கிடையில் JCM தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா அளித்துள்ள தகவலின் படி, நிலை-1 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை கிடைக்கும் என்றும், நிலை-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 ஊழியர்களின் DA தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் – முன்னிலையில் திமுக!

குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய மொத்த அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உள்ளது. இது 34% ஆக அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது. இப்போது DA கணக்கீடுகளின் படி, அகவிலைப்படி சதவீதம் = ((AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில்-115.76)/115.76) x 100 ஆக இருக்கிறது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை ஜனவரி முதல் ஜூலை வரை ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here