தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் – திருப்தி அளிக்கவில்லையெனில் ‘டிஸ்மிஸ்’! உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் - திருப்தி அளிக்கவில்லையெனில் 'டிஸ்மிஸ்'! உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் - திருப்தி அளிக்கவில்லையெனில் 'டிஸ்மிஸ்'! உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் – திருப்தி அளிக்கவில்லையெனில் ‘டிஸ்மிஸ்’! உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளது. இந்நிலையில், பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் திருப்தி அளிக்கவில்லையெனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணி:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிட்டதட்ட 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எப்போதும் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக உடனடியாக பணியிடங்கள் நிரப்பப்படுவது என்பது முடியாத காரியம். இதனால், தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் மற்றும் பணிக்கு வருவதற்கு ஏதுவாக பள்ளிக்கு அருகே வசிப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றங்கள்!

மேலும், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்தான விவரங்களை எளிமையாக தெரிந்துகொள்ளும்படி அந்தந்த பள்ளிகளில் காலிப்பணியிட விவரங்களை பலகையில் எழுதி ஒட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் ஆசிரியர் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக அந்த ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!