தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் – முக்கிய திருப்பம்!

0
தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் - முக்கிய திருப்பம்!

பிப்ரவரி 15ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த இருந்த போராட்டத்தில் தற்போது முக்கிய திருப்பம் ஒன்று நடந்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்:

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ அமைப்பானது இதுவரையிலும் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறது. தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதற்காக இதுவரையிலும் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தின் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தனர்.

சிறிய காலத்தில் பணக்காரராக வேண்டுமா? பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்நிலையில் இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு நாளை நடைபெறவிருந்த போராட்டத்தை தற்போது வாபஸ் பெற்றுள்ளனர். பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடத்த இது இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!