தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

தமிழ்கத்தில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இணைய வழியில் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உயர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு பொறியியல் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை இணையதள வழியில் மேற்கொள்ளப்பட்டது. 2022-2023 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது.

LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? இல்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

மேலும் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் மூன்று வகையாக வெளியிடப்படும். அதாவது, பி.ஏ தமிழ் இலக்கியம்/ பி.லிட் உள்ளிட்ட படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதே போன்று, பி.ஏ. ஆங்கில இலக்கிய சேர்க்கைக்கான ஆங்கில தரவரிசைப்பட்டியல், 12ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.

Daily Mobile App Download

இதனை தொடர்ந்து B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W உள்ளிட்ட படிப்பிற்கு 12ம் வகுப்பில் மொழி பாடங்களை தவிர்த்து மீதமுள்ள 4 பாடங்கள் அடிப்படையில் பொது தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது சம்பந்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இணையதளத்தில் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு கலை மற்றும் கல்லூரிகளில் மொத்தமாக 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 5ம் தேதி இதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!