LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? இல்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

0
LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? இல்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? இல்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
LPG கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? இல்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு மானிய பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் மானியத் தொகை டெபாசிட் செய்யப்படுவதில்லை அல்லது வேறு கணக்கிற்கு செல்வதாக புகார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

LPG மானியத்தொகை:

LPG நிறுவனங்கள் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து அவ்வப்போது தங்கள் விதிகளை திருத்தி வருகின்றன. அதன்படி மக்கள் தங்கள் கணக்கில் மானியத் தொகை டெபாசிட் செய்யப்பட்டதா இல்லையா, எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வீட்டில் இருந்தே ஸ்மார்ட் போனில் பார்க்கும் வகையில் பல வசதிகள் உள்ளது. கடந்த பல மாதங்களாக LPG கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Commonwealth Games 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

  • முதலில் Mylpg.in இணையதளத்திற்கு செல்லவும். அங்கு உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின் பெயரை (HP, Bharat மற்றும் Indane) கிளிக் செய்யவும்.
  • அதன் பின்னர் புதிய பக்கத்தில் 17 இலக்க LPG ஐடியை உள்ளிடவும். எல்பிஜி ஐடி தெரியவில்லை என்றால், ‘உங்கள் எல்பிஜி ஐடியை அறிய இங்கே கிளிக் செய்யவும்’ என்பதன் மூலம் கண்டறியலாம்.
Exams Daily Mobile App Download
  • பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், LPG Customer ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவலை உள்ளிடவும். அதன் பின்னர் புதிய பக்கத்தில் உங்கள் LPG ஐடி தெரியும். உங்கள் எல்பிஜி கணக்குடன் உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதும் அதில் குறிப்பிடப்படும்.
  • பின்னர் அதன் இடது பக்கத்தில் உள்ள ‘சிலிண்டர் முன்பதிவு / மானியப் பரிமாற்றத்தைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும். அதில் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மானியத் தொகை மற்றும் முந்தைய மாதங்களில் வாங்கிய சிலிண்டர்களின் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
  • எனவே எல்பிஜி மானியம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வங்கிக்குச் செல்ல தேவையில்லை. உங்கள் மொபைலில் இருந்தபடியே இந்த எளிய முறையில் அறிந்து கொள்ளலாம்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!