சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் மாறி வருகிறது. மேலும் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்க விலை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். அத்துடன் வெளிநாட்டினர் கூட தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் மாறி கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு! தொடரும் போராட்டங்கள்!

ஏனெனில் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் தங்கத்தை எந்த நேரத்தில் வாங்கினால் சரியாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குகின்றனர். அத்துடன் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் தங்க நகைகளை வாங்க விரும்புவர்கள் இப்பொழுதே தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொண்டால் லாபகரமானதாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

தற்போது இன்றைய தங்க விலை பற்றிய தகவல்களை பார்ப்போம். சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 152 ரூபாய் குறைந்து ரூ.38,720க்கு விற்பனையாகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளியின் 50 காசுகள் குறைந்து ரூ.66க்கும் அத்துடன் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!