சென்னை: சவரனுக்கு ரூ.184 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: சவரனுக்கு ரூ.184 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: சவரனுக்கு ரூ.184 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: சவரனுக்கு ரூ.184 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.184 குறைந்துள்ளது. மேலும் ஒரு சவரன் ரூ.36,152க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சரிவு

கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் . இதனால் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் கவனம் செலுத்த தொடங்கினர். அதனால் பங்கு சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பின. அத்துடன் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தையே பெருமளவில் வாங்கி வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தற்போது சென்னையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 குறைந்து சவரனுக்கு ரூ. 36,152 என்று விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,519-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆபரண தங்கத்தின் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதே போல் நேற்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 65.20 என்று விற்பனை செய்யப்பட்டது.

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!

மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.65200 என்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.64.60 என விற்பனையாகிறது. அத்துடன் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64600 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!