தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8 ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தனக்கென தனித்துவமான பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குன்னூரில் உள்ள ஜெகதளா கிராமத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையானது 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விமர்சையாக கொண்டாடப்படும். பண்டிகை காலத்தில் கேத்தி பந்துமை, எப்பநாடு, தாவணெ, பெத்துவா, ஒன்னதலை, பேரகனி பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து அனைவரும் ஒன்றிணைந்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவர்.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு?

இந்த விரத நாட்களில் கிராம மக்கள் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு சொல்வது வழக்கம். அதனை தொடர்ந்து படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேறும் விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஹெத்தையம்மன் பண்டிகை ஆரவாரங்கள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் அரசின் நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி நடைபெற்றது.

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!

மற்ற ஆண்டுகளை தொடர்ந்து நடப்பு ஆண்டு ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வரும் டிசம்பர் 22ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2022 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக அம்மாவட்ட அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!