TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!

0
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!

தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC) நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (டிச.15) வெளியாகி இருக்கும் நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC) இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதியன்று TNPSC குரூப் 1 தேர்வை நடத்தியது. அந்த வகையில் 66 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட TNPSC முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (டிச.15) வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 18 மாத DA நிலுவைத்தொகை விரைவில்! பிரதமர் முடிவு!

தமிழகம் முழுவதும் சுமார் 1,31,701 பேர் எழுதிய இத்தேர்வில் 3,800 பேர் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குரூப் 1 தேர்வர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 2022ம் ஆண்டு மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் குரூப் 1 முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்போது TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இசேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிச.12 முதல் ஜன.5ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது TNPSC குரூப் 1 முதல்நிலைத்‌ தேர்வு எழுதிய தமிழ்‌ வழியில்‌ பயின்ற விண்ணப்பதாரர்கள்‌ அதற்கான சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Mains Exam Date

Download Revised List PDF

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!