சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைவு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. அதன்படி தற்போது ஆபரண தங்கத்தின் விலை ரூ.35,832க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வேதனையில் உள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளது சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோரின் மோகம் குறையாமல் உள்ளது. மேலும் தங்க நகை சேர்ப்பது சிறந்த முதலீடாக உள்ளது.
தமிழக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – பிளஸ் 2 மாணவிக்கு கொரோனா தொற்று!
தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இனிமேல் குறைய வாய்ப்பில்லை. எனவே, தற்போதே தங்க நகை வாங்கி சேர்த்துக் கொள்வது நல்லது. மத்திய அரசு ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடத்தின் காரணமாக தங்க நகை வாங்கினால் அதன் மதிப்பு எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும் நிலை உள்ளது.
தமிழக தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி நேற்றைய தங்கவிலையை விட கிராம் ஒன்றிற்கு ரூ136 குறைந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.35,832க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,479-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.