தமிழக அரசு மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மீன்வளத்துறையில் உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் மக்கள் TNPSC தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து வந்தனர். இதனையடுத்து அண்மையில் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மட்டும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!

இந்த நிலையில் மீன்வளத்துறையில் அரசுக்கும், மீனவர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, சாகர் மித்ரா 600 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், போன்ற பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜனவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 35 திற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.10,000 + 5,000 வழங்கப்படும்

தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.fisheries.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பணிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!