மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!

தற்போது ஒமிக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையானது மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

DA உயர்வு

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேலாக நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை 31% ஆக உயர்த்தி அறிவித்த அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அல்லது இந்த ஆண்டு துவக்கத்தில் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலையடுத்து இத்தொகை மீண்டும் சில காலம் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

அதாவது, நிதித்துறை அமைச்சகத்தின் பெயரில் அகவிலைப்படி குறித்து சமூக வலைதளத்தில் உலா வரும் கடிதத்தில், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் முடிவு தற்போதைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் ஒரு குழப்பமான சூழல் ஏற்பட துவங்கியது.

மாநில வாரியாக வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு – முழு விவரங்கள் இதோ!

இந்நிலையில் வலைதளங்களில் வெளியான செய்தியை சரி பார்த்த ஊடகங்கள் இது போலியானவை என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது சமூக ஊடகங்களில் நிதி அமைச்சகத்தின் ஆணையுடன் வெளியான உத்தரவில் எழுதப்பட்ட இரட்டைக் கோப்பு எண் இந்தக் கடிதங்கள் போலியானது என்பதை நிரூபித்துள்ளது. மேலும் ஒமிக்ரான் பரவலால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!