தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆணை வெளியீடு!

0
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - ஆணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - ஆணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான ஆணைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கியுள்ளார். இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

இ-சேவை மையங்கள்

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு செயல்படுத்தி வருகிறது. அத்துடன் இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் குறைந்த விலையில் பல்வேறு சேவைகளை பெற முடிகிறது. அதிலும் குறிப்பாக இ-சேவை மையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இதன் மூலமாக பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகளை பெற முடிகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இ-சேவை மையங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் செலுத்துவதற்கு உதவி புரிகிறது.

ஐபிஎல் 15-வது தொடரில் புதிதாக களமிறங்கும் இரு அணிகள் – பிசிசிஐ செயலாளர் தகவல்!

மேலும் அரசு இ – சேவை மையங்களில் வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அத்துடன் இதன் மூலமாக விவசாயத்திற்கான வருமானச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெறுவதற்கான சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்களை எளிதான முறையில் பெற முடிகிறது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு, வார இறுதி ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

இதுவரை தமிழ் நாட்டில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் 2457 இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் வழியாக ‘இ – சேவை’ மையங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 36 பேருக்கு ‘இ – சேவை’ மையத்தை தொடங்குவதற்கான ஆணைகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் வழங்கினார். இவ்வாறு ஏராளமான இடங்களில் ‘இ – சேவை’ மையங்களை தொடங்கப்படுவதால் பொது மக்கள் கால தாமதமின்றி சான்றிதழ்களையும், வரிகளையும், கட்டணங்களையும் செலுத்த முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!