அரசு பள்ளிகளில் 1,050 ஆசிரியர்கள் நியமனம் – மாநில கல்வித் துறை அறிவிப்பு!

0
அரசு பள்ளிகளில் 1,050 ஆசிரியர்கள் நியமனம் - மாநில கல்வித் துறை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 1,050 ஆசிரியர்கள் நியமனம் - மாநில கல்வித் துறை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 1,050 ஆசிரியர்கள் நியமனம் – மாநில கல்வித் துறை அறிவிப்பு!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு நிலைகளுக்கான ஆசிரியர்களின் 1,050 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் நியமனம்:

கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இடையில் கொரோனா தொற்று நிலைமை சீரடைந்து இருந்ததால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மாணவர்களின் நலன் கருதி நேரடி வகுப்புகளை தடை செய்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் பல்வேறு நியமனங்கள் செய்யப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆணை வெளியீடு!

தற்போது நிலைமை சற்று மீண்டு வருவதால் அரசு பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் அரசு, அரசுப் பள்ளிகளில் 1050 ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்தவுள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை விரைவில் தொடங்கும். இது தொடர்பாக மத்திய அமைச்சகம் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை மாணவர்களின் ஆன்லைன் கல்வியைப் பாதிக்கிறது.

ஐபிஎல் 15-வது தொடரில் புதிதாக களமிறங்கும் இரு அணிகள் – பிசிசிஐ செயலாளர் தகவல்!

புதிதாக ஆசிரியர் நியமனம் மூலம் கல்வித் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். 600 JBT, 250 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) மற்றும் சுமார் 200 விரிவுரையாளர்களை நியமிக்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க கல்வித் துறை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிரிவு 26ஐ அணுகியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் பணிநியமன செயல்முறை விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!