‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வர இருக்கும் திருமண கொண்டாட்டம் – அடுத்தகட்ட எபிசோடுகள்!

0
'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வர இருக்கும் திருமண கொண்டாட்டம் - அடுத்தகட்ட எபிசோடுகள்!
'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வர இருக்கும் திருமண கொண்டாட்டம் - அடுத்தகட்ட எபிசோடுகள்!
‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வர இருக்கும் திருமண கொண்டாட்டம் – அடுத்தகட்ட எபிசோடுகள்!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இரு வீட்டார் சம்மதத்துடன் சரஸ்வதி மற்றும் தமிழ் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இனி வரும் எபிசோடுகளில் இது குறித்த காட்சிகள் வர இருக்கிறது.

திருமண கொண்டாட்டம்:

விஜய் டிவியின் சீரியல்களில் பலவும் ரசிகர்களின் பேராதரவுடன் மேக வெற்றியை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையின் முடி சூடா மன்னனாக விளங்கும் விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியல் மற்ற சீரியல்களில் இருந்து சற்று மாறுபட்ட கதையம்சத்தை கொண்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஒரு வித எதிர்பார்ப்புடன் சீரியலை கவனித்து வருகின்றனர். தனது மகனுக்கு நன்கு படித்த பெண் தான் மனைவியாக வர வேண்டும் என்று நினைக்கிறார் கோதை.

‘மௌனராகம் 2’ சீரியலில் தருணை மிரட்டி காதலிக்க சொல்லும் சுருதி – ப்ரோமோ ரிலீஸ்!

இதேபோல், நல்லாசிரியர் விருது பெற்றவராக உள்ளார் சரஸ்வதியின் அப்பா. குடும்பத்தில் அனைவரும் நன்கு படித்தவர்களாக உள்ள போதிலும் மூத்த மகள் சரஸ்வதி மட்டும் 12ம் வகுப்பு கூட பாஸ் ஆகாமல் பல வருடங்களாக உள்ளார். இதனால் அவர் மீது அப்பாவிற்கு கோவம் இருக்கிறது. இந்நிலையில், சரஸ்வதியும் தமிழும் கோயிலில் சந்தித்து காதலிக்க தொடங்குகிறார்கள். தமிழின் அம்மா கோதைக்கும் சரஸ்வதியை மிகவும் பிடித்து விடுகிறது. அவரும் சரஸ்வதி நன்றாக படித்தவர் என்று நினைக்கிறார்.

ஐபிஎல் 15-வது தொடரில் புதிதாக களமிறங்கும் இரு அணிகள் – பிசிசிஐ செயலாளர் தகவல்!

இதனால் சரஸ்வதியின் வீட்டில் சம்மந்தம் பேசுகிறார்கள். முதலில் யோசித்த சரஸ்வதியின் அப்பா பின்னர் ஒத்துக் கொள்கிறார். ஆனால் வசுந்தராவின் அம்மா சந்திரகலா இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சிகளை செய்து வருகிறார். இதையும் மீறி எப்படியாவது திருமணத்தை நடத்த தமிழ் மற்றும் சரஸ்வதியும் போராடி வருகின்றனர். தற்போது தமிழின் திருமண கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது போல் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் இது தொடர்பான காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் வரும் என்பது தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!