கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை – புதிய திருப்பதுடன் பாரதி கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை - புதிய திருப்பதுடன் பாரதி கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை - புதிய திருப்பதுடன் பாரதி கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை – புதிய திருப்பதுடன் பாரதி கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!

ஒன்றரை மணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் உதவியுடன் இருதயத்தை கொண்டு செல்லவே முடியாது என கூறி வந்த நிலையிலும் கண்ணம்மா உறுதியாக இதனை செய்ததால் தற்போது குழந்தை அறுவை சிகிச்சை முடிந்து உயிர் பிழைத்து பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதிகண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இதயத்தைக் கொண்டு செல்ல ஹெலிகாப்டரை தயார் படுத்தினர். ஆனால், எதிர்பாராதவிதமாக மழைப் பொழிவின் காரணமாக ஹெலிகாப்டரில் குழந்தையின் இருதயத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இது மாதிரியான இக்கட்டான சூழல் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது குழந்தையின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக கண்ணம்மா ஏற்கனவே ஒரு பிளான் போட்டு வைத்திருக்கிறார்.

TNPSC GROUP 2 தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – இறுதி கட்ட திருப்புதலின் முக்கியத்துவம்!

அதாவது ஒன்றரை மணிநேரத்திற்குள் குழந்தையின் உடலில் இதயத்தை செலுத்தினால் மட்டுமே குழந்தை உயிர் பிழைக்க முடியும் என கூறுகிறார்கள். அது சாத்தியமே இல்லை ஒன்றரை மணி நேரத்திற்குள் எப்படி விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்வது என மருத்துவர்கள் அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து கண்டிப்பாக ஒன்றரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் உதவியுடன் இருதயத்தை கொண்டு செல்ல முடியும் என கண்ணம்மா கூறுகிறார்.

ஆனால் கண்ணம்மா கூறுவதை யாருமே கேட்கவில்லை. ஆனால், தற்போதே கிளம்பினால் குழந்தையின் உயிரை காப்பாற்றலாம் என உத்தரவாதமாக கூறுகிறார். இதனால் மருத்துவர்கள் அனைவரும் கண்ணம்மா கூறுவதைக் கேட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் இருதயத்தை கொண்டு சென்று சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றுகின்றனர். அந்த குழந்தை உயிர் பிழைத்து கண்ணம்மாவிடம் வீடியோ கால் மூலமாக பேசும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here