இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த Work From Home – சர்வே முடிவுகள்!

0
இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த Work From Home - சர்வே முடிவுகள்!
இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த Work From Home - சர்வே முடிவுகள்!
இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த Work From Home – சர்வே முடிவுகள்!

இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளின் படி வேலை தேடுபவர்கள் அதிகளவில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிறுவனங்களை விரும்புவதாக .தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிக்கை:

தற்போதைய தொற்றுநோய் மற்றும் வைரஸால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக Work From Home செயல்முறை நெறிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து, வேலைத் தளத்தில் 93,000 நிரந்தர மற்றும் தற்காலிக தொலைதூர வேலைகள் Naukri.com இல் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து வேலைகள் பட்டியல்களில், இவற்றில் 22 சதவீதம் மட்டுமே நிரந்தரமாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் நாட்டில் வேலை வாய்ப்பை தேடுபவர்கள் Naukri.com ல் நிரந்தர மற்றும் தற்காலிகமாக வீட்டில் இருந்து வேலை செய்ய 32 லட்சம் தேடுதல்களை செய்துள்ளனர்.

Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்!

இவற்றில் மொத்த பணிகளில் 57% நிரந்தரமாக பணி செய்யும் வாய்ப்புகளை தேடுகின்றனர். 3.5 லட்சத்திற்கும் அதிகமான தேடல்கள் டிசம்பர் 2021 இல் மட்டுமே பதிவாகியுள்ளன. இது அதிகாரபூர்வ அறிக்கையில், Naukri.com இன் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல், நோய் தொற்று பரவல் காரணமாக நிறுவன கட்டமைப்புகளின் அடித்தளங்கள் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். வழக்கமான, தொலைதூர மற்றும் தற்காலிகமாக என்று மூன்று வகையாக WFH வேலைகள் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன.

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடியிலிருந்து கணக்கை பாதுகாப்பது எப்படி? எச்சரிக்கை பதிவு!

IT மென்பொருள், மென்பொருள் சேவைகள், ITeS மற்றும் பணியாளர் துறைகளில் அதிக அளவிலாக நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றது. Trigent, Flipkart, Amazon, Tech Mahindra, HCL, PWC ,Siemens, Deloitte, Oracle, Zensar, TCS, Capgemini போன்ற நிறுவனங்கள் தற்காலிக மற்றும் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் பணி வாய்ப்புகளை வழங்குகின்றது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Work From Home செயல்முறை இந்தியாவில் 100% அளவில் வெற்றியை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!