இந்திய தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இந்திய தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறை:

இந்திய தபால் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தபால் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2 பணியிடங்களுக்குமே தேர்வு எதுவும் நடத்தப்படாமல் பத்தாம் வகுப்பில் மாணவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படுகிறது. தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் ஆகிய இரண்டு காலிப் பணியிடங்களுக்கும் மொத்தமாக 38,926 காலிப் பணியிடங்களும், தமிழ்நாட்டில் மட்டுமே 4310 காலிப் பணியிடங்கள் உள்ளன.

Exams Daily Mobile App Download

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பதாரருக்கு கண்டிப்பாக சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள அனைவருமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. தபால் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம்தோறும் 12 ஆயிரம் வரைக்கும், உதவி அலுவலர் பணிக்கு ரூபாய் 10,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூபாய் 100 ஆன்லைன் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், எஸ்சி எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இந்த பணியிடம் குறித்தான ஏதேனும் விவரங்கள் அறிய விரும்பினால் https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf  என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். எப்போதும் போஸ்ட் ஆபீஸ் ஜிடிஎஸ் பணியிடங்களுக்கு 97 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணியிடம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணியிடம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!