ரோஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. நெருங்கும் கிளைமாக்ஸ்- சன் டிவி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
ரோஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. நெருங்கும் கிளைமாக்ஸ்- சன் டிவி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
ரோஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. நெருங்கும் கிளைமாக்ஸ்- சன் டிவி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
ரோஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. நெருங்கும் கிளைமாக்ஸ்- சன் டிவி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

சன் டிவியில் மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் சென்று வரும் ரோஜா சீரியலில் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த காட்சிகள் வர உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

ரோஜாவின் குழந்தை:

சன் டிவியில் கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளை தாண்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் தற்போது மிகவும் முக்கியமான கட்டம் நெருங்கியுள்ளது. பல இன்னல்களை தாண்டி ரோஜாவும் அர்ஜுனும் தங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ரோஜாவை அர்ஜுன் காட்டுப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு கூட்டி செல்கிறார். அன்று சூரிய கிரகணம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் வெளியேசெல்ல கூடாது என்று பாட்டி பதறுகிறார்.

கோபியுடன் சென்ற இனியா.. ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு.. சிக்கலில் ராதிகா – அதிரடி திருப்பம்!

Exams Daily Mobile App Download

அவர்கள் பயந்த படியே ரோஜாவுக்கு காட்டுப்பகுதியில் இருக்கும் போதே பிரசவ வலி வந்து விடுகிறது. அர்ஜுன் கயலின் ஆஸ்பத்திரிக்கு ரோஜாவை கூட்டி செல்ல முயற்சிக்கிறார். ஆனால், இடையில் பாலம் இடிந்து விழுந்து இருப்பதால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ரோஜா வலியில் துடிக்கிறார். இப்படி மிகவும் பரபரப்பான காட்சிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குழந்தையை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரோஜாவுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்து விடும் என்று தெரிகிறது. மேலும், சீரியல் கிளைமாக்ஸ் பகுதியையும் நெருங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!