வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த சன் டிவி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

0
வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த சன் டிவி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!
வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த சன் டிவி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!
வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த சன் டிவி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் பிரபலமான சீரியலில் ஒன்றான “பாண்டவர் இல்லம்” சீரியலில் நடித்து வரும் நடிகை அணு, நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருடைய வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

வளைகாப்பு புகைப்படங்கள்:

அந்த காலத்தில் சீரியல் நடிகை என்றாலே, குழந்தை பெற்ற பின் மார்க்கெட் குறைந்துவிடும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது நடித்து வரும் சீரியல் நடிகைகள் அந்த நடைமுறையை மாற்றி வருகின்றனர். தங்களுடைய பிரசவ காலத்தில் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து, மேலும் குழந்தை பிறந்த பின் கூட அவர்கள் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றனர். ஒரு சில சீரியல்களில் கதையிலும் நடிகை கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு, குழந்தை பிறப்பது போல காட்டப்படுகிறது.

ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை – பாரதியின் அடுத்த முடிவு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டவர் இல்லம் சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அணு. அவர் அந்த சீரியலில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் அவர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து அவர் சீரியலில் நடித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட வளைகாப்பு புகைப்படங்கள் சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!