ஏப்ரல் முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிப்பு – மாநில வாரியான பட்டியல் இதோ!

0
ஏப்ரல் முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிப்பு - மாநில வாரியான பட்டியல் இதோ!
ஏப்ரல் முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிப்பு - மாநில வாரியான பட்டியல் இதோ!
ஏப்ரல் முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிப்பு – மாநில வாரியான பட்டியல் இதோ!

உத்தரபிரதேசம் முதல் ஆந்திரா வரையிலான பல மாநிலங்கள் 2022ம் கல்வியாண்டுக்கான பள்ளி கோடை விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளன. அதன்படி இப்பதிவில், பள்ளி விடுமுறைக்கான தேதிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

கோடை விடுமுறைகள்

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடையூறுக்கு பிறகு 2022ம் ஆண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் கடுமையான வெப்ப நிலை சிக்கலை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை வெப்பம் வழக்கத்திற்கு முன்னதாகவே தீவிரமடைந்து வருவதால் இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல மாநில அரசுகள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கான தேதிகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தொற்றுநோய் காரணமாக கல்வி இடையூறு ஏற்பட்டதால், இழந்த நேரத்தை ஈடுசெய்ய இந்த ஆண்டு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.

TNPSC 7000+ Group 4, VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

இதற்காக, பல்வேறு மாநிலங்களில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான இறுதியாண்டு தேர்வுகளை மே மாதம் முடிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, உத்தரப் பிரதேசம் முதல் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வரையிலான பல மாநிலங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான கோடை விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் கோடை விடுமுறை அறிவித்துள்ள அனைத்து மாநிலங்களின் சமீபத்திய பட்டியலை இப்போது பார்க்கலாம்.

உத்தரபிரதேசம்:

இம்மாநிலத்தில் கோடை விடுமுறைகள் மே 21 முதல் ஜூன் 30 வரை தொடரும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 51 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கும்.

சத்தீஸ்கர்:

இந்த ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி முடிவடையும் என்று சத்தீஸ்கர் மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒடிசா:

ஒடிசாவில் கோடை விடுமுறை இந்த ஆண்டு 35 நாட்கள் குறைக்கப்பட்டு ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநிலத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக, ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஐந்து நாட்களுக்கு வகுப்புகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா:

1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விதர்பாவைத் தவிர, மற்ற பள்ளிகளுக்கான அடுத்த கல்வியாண்டு ஜூன் 27 அன்று மீண்டும் திறக்கப்படும்.

கர்நாடகா:

பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 10 முதல் மே 15 வரை கர்நாடகா மாநில அரசு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது.

ஆந்திரா:

அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு மே 6 முதல் ஜூலை 4 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here