TNPSC 7000+ Group 4, VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

0
TNPSC 7000+ Group 4, VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
TNPSC 7000+ Group 4, VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
TNPSC 7000+ Group 4, VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்த கூடிய குரூப் 4 VAO தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் விரைந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் தற்போது அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய குரூப்4&VAO தேர்வுகான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றவர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தேர்வானது கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக அரசுத்துறையில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதால் அதிக தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி இந்த வசதி எல்லாம் கிடைக்கும்!

நடப்பு ஆண்டு தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில் குரூப்4 & VAO தேர்வின் கீழ் மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை இந்த வருடம் தேர்வின் மூலம் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அறிவிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 28ம் தேதி முதல் விண்ணங்கள் வரவேற்கப்பட்டது. ஏப்ரல் 28 அதாவது 1 மாத காலம் விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதுவரை சுமார் 13 லட்சம் பேர் குரூப்47 தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்கியுள்ள நிலையில் இன்னும் விண்ணப்ப பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் விண்ணப்பிக்காத தேவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மற்றும் விண்ணப்ப பதிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு 800 419 0958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்களின் சந்தேகங்களை கேட்டு அறியலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!