பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்று வரும் நிலையில், இந்த வாரம் சுஜா வருணி தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் எலிமினேஷன்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தான் OTT ல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரமும் OTT ஒளிபரப்புக்கு என்பதால் அதிக வரவேற்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடிக்க தவறி விட்டது பிக் பாஸ் அல்டிமேட். வார இறுதியில் கமல் வரும் எபிசோடுகள் மட்டும் தான் சற்று அதிக அளவில் மக்கள் பார்த்து வருகின்றனர்.

உடல்எடை கூடி குண்டான நடிகை மஞ்சிமா மோகன் – ரசிகரின் கேள்விக்கு அவர் அளித்த பதிலடி!

இதுவரை வந்த 5 சீசன்களின் முக்கிய போட்டியாளர்கள் தான் இதில் கலந்து கொள்வதால் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று வருகிறது. மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், கடந்த வாரம் முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். மேலும், போன வாரம் காபிக்கு நடந்த போராட்டம் இணையம் முழுவதும் பேசும் விஷயமாக மாறி இருந்தது. இதனிடையில் போன முறை இந்த வார எலிமினேஷனிற்காக ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது.

பிறந்தநாளில் லட்சுமியின் அப்பா பற்றிய உண்மையை சொல்லும் கண்ணம்மா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதில், கிடைத்த வாக்குகளின் வித்தியாசத்தில் நடிகை சுஜா வருணி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் மற்ற போட்டியாளர்களை விட குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்றதால் தான் இந்த முறை வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் இறுதி வரை செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட சுஜா தற்போது வெளியேறி இருப்பது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய எபிசோடில் இதற்கான காட்சிகள் வர உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!