பிறந்தநாளில் லட்சுமியின் அப்பா பற்றிய உண்மையை சொல்லும் கண்ணம்மா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாள் விழா குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், பாரதி பற்றிய உண்மையை கண்ணம்மா சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாள் விழா குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் தனது பிறந்த நாளில் லட்சுமியின் அப்பா பற்றிய உண்மையை கண்ணம்மா சொல்லப்போவதாக கூறியுள்ளார். தன் அப்பா பற்றி தெரிந்து கொள்ள லட்சுமி அதிக ஆர்வத்தில் இருக்கிறாள். கண்ணம்மாவும் ஒரே முடிவாக பாரதியை பற்றி லட்சுமியிடம் சொல்ல தயாராகி வருகிறாள்.
திருமணத்திற்கு பின் ஆர்யனுடன் வெளியே சென்ற ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் பாரதி இதனால் கடும் கோவத்தில் இருக்கிறார். மருத்துவராக இருந்து கொண்டும் பாரதி தன் மனைவியை சந்தேகப்படுவது தான் பலருக்கும் இந்த சீரியலில் உள்ள கதை இடிப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன் குழந்தை தான் லட்சுமி என்பதை அறிந்து கொள்ள ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்தாலே போதும். ஆனால் அதை செய்யாமல் பாரதி அடம்பிடிப்பது ஆச்சர்யமடைய வைக்கிறது. இப்படியான நிலையில், தன் பிறந்த நாளிற்கு பாரதியை கண்ணம்மா வீட்டிற்கு வந்து அழைக்கிறாள். கட்டாயம் வர வேண்டும் என்று அழுகிறாள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோதை, பரிதவிக்கும் தமிழ், சரஸ்வதி – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
அதே வேளையில், இன்னோரு புறம் லட்சுமி தன் அப்பாவை பற்றி பாரதியிடம் போன் செய்து கேட்டு அழுகிறாள். பாரதி உண்மையை சொல்லமுடியாமல் தவித்து வருகிறார். இதனால் லட்சுமி ஹேமாவிற்கும் போன் செய்து இது பற்றி கூறுகிறாள். பாரதிக்கு இது பெரிய தலைவலியாக இருக்கிறது. இதனால் கடும் கோவத்தில் இருக்கிறான். வரும் வாரத்திற்கான எபிசோடுகள் குறித்து இணையத்தில் வெளியான தகவலின் படி கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவிற்கு வரும் பாரதியிடம் கண்ணம்மா வேறு விதத்தில் உண்மையை தெரியவைக்க இருப்பதாக கூறப்படுகிறது.