‘தமிழ்நாடு’ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையா?- ஆளுநர் R.N ரவி விளக்கம்!

0
'தமிழ்நாடு' பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையா?- ஆளுநர் R.N ரவி விளக்கம்!
'தமிழ்நாடு' பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையா?- ஆளுநர் R.N ரவி விளக்கம்!
‘தமிழ்நாடு’ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையா?- ஆளுநர் R.N ரவி விளக்கம்!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு’ என்ற மாநில பெயரை மாற்றுவதற்கான செயல்கள் நடந்து வருவதாக மக்கள் அதிருப்தியில் நிலையில் இருக்கும் போது, ஆளுநர் இதற்கு விளக்கம் அளித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் விளக்கம்:

2023ம் ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழக அரசு தயார்படுத்திக் கொடுத்த உரையில் பல திருத்தங்களை செய்து, பேசியுள்ளார் என்றும், ‘தமிழ்நாடு’ என்ற பெயரை தவிர்த்து விட்டு ‘தமிழகம்’ என்ற பெயரை உள்நோக்கத்துடன் பயன்படுத்துவதாக தமிழக அரசு புகார் தெரிவித்தது. இதேபோல், ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘காசியுடன் தமிழ் மக்களின் பழைமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ சங்கமம் விழாவில் பேசிய போதும் ஆளுநர் ‘தமிழகம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் ஆளுநர் தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை தமிழகம் என்று மாற்றும் கோரிக்கையை ஆதரிப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சில நாட்களாக சலசலப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜன.4ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற காசி – தமிழ் சங்கமம் விழாவில் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பற்றி பேசும் போது தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது, பண்டைய கால சூழலில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்க வில்லை.

தமிழகத்தில்  நீடிக்கும் வறண்ட வானிலை  – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இதனால், அப்போதைய கால சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும், இதனை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான எனது பரிந்துரையாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறானது மற்றும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்றும், இது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களை முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான் இந்த விளக்கத்தை அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!