தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு – பள்ளிகள் திறப்பு எதிரொலி!

0
தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு - பள்ளிகள் திறப்பு எதிரொலி!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு - பள்ளிகள் திறப்பு எதிரொலி!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு – பள்ளிகள் திறப்பு எதிரொலி!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் தனியார் பேருந்துகளில் கட்டணம் 20% வரைக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து கட்டணம்

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். எப்போதும் மார்ச் ஏப்ரல் மாதங்களிலேயே அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்படும்.

TN Job “FB  Group” Join Now

ஆனால், இந்த ஆண்டு காலம் தாழ்த்தி தான் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மே 13ம் தேதி வரைக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்ததும் மே 11ம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதற்கு நடுவே கொரோனா பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு அறிவித்திருந்த ஜூன் 13-ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இந்த வாரம் 2 நாட்களுக்கு விடுமுறை!

கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை என்பதால் வெளியூருக்கு சென்ற அனைவரும் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளனர். இதனால் தனியார் பேருந்துகள் அனைத்திலும் 20% வரைக்கும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் திருச்சி முதல் சென்னை இடையே தனியார் பேருந்துகளின் கட்டணம் ரூ.800 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படும். ஆனால், தற்போது 20 சதவீதம் வரைக்கும் பேருந்து கட்டண உயர்வால் ரூ.3 ஆயிரம் வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊருக்குத் திரும்பிய பெற்றோர்கள் அனைவரும் பேருந்து கட்டணத்தை உயர்வால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!