என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு தடை – FSSAI அறிவிப்பு!!

0
என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு தடை - FSSAI அறிவிப்பு!!
என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு தடை - FSSAI அறிவிப்பு!!
என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு தடை – FSSAI அறிவிப்பு!!

இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் செயல்படும் என்.ஏ.பி.எல் சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

என்.ஏ.பி.எல் சான்று:

உணவு பகுப்பாய்வு மையங்கள் உட்பட பல்வேறு ஆய்வகங்களுக்கு சர்வதேச சான்றிதழ்களை வழங்குவதற்கு, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை 1998-ஆம் ஆண்டு என்.ஏ.பி.எல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் ஆய்வகங்களில் கருவிகள் மற்றும் பகுப்பாய்வு முறைகளை குறித்து வழிகாட்டுவதற்கும் உதவுகிறது.

குரூப் 1 தேர்வுக்கான புதிய நடைமுறைகள் – TNPSC தலைவர் அறிவிப்பு!!

இதன்படி தமிழகத்தில் உள்ள மதுரை, சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் உணவு பகுப்பாய்வு மையங்கள் என்.ஏ.பி.எல் சான்று பெற கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 10 வருடம் கடந்த பின்னும் அந்த மையங்கள் என்.ஏ.பி.எல் சான்று வாங்காமல் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் என்.ஏ.பி.எல் சான்று பெற வேண்டும் இல்லையென்றால் அந்த மையங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

Download TNPSC Group 1 Hall Ticket

இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் உணவு பகுப்பாய்வு மையங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டு வருகிறது இருந்த போதிலும் அவைகளுக்கு என்.ஏ.பி.எல் சான்று பெற்றால் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் அதனால் தான் எப்.எஸ்.எஸ்.ஏ.,ஐ அழுத்தம் தருகிறது. விரைவில் என்.ஏ.பி.எல் சான்று பெறப்படும் அதுவரை பகுப்பாய்வு மையங்கள் செயல்பட தடையில்லை” என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!