இந்தியாவில் விரைவில் Sky பஸ்கள் அறிமுகம்? மத்திய அமைச்சர் விளக்கம்!

0
இந்தியாவில் விரைவில் Sky பஸ்கள் அறிமுகம்? மத்திய அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் விரைவில் Sky பஸ்கள் அறிமுகம்? மத்திய அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் விரைவில் Sky பஸ்கள் அறிமுகம்? மத்திய அமைச்சர் விளக்கம்!

டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்கை பஸ்கள்:

நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் பல மாநிலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அதனை குறைக்க வழி வகை செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் என்று கூறப்படும் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

நாட்டில் முதற்கட்டமாக டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கும் நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் விரைவில் பறக்கும் பேருந்து வசதி கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து உள்ளதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு புதிய மாற்றம் அறிமுகம் – முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் முதல் ஸ்கைபஸ் டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி நல்லது அல்ல என்பதால் காலநிலைக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள தௌலா குவானிலிருந்து இருந்து மனேசருக்கு ஸ்கை பஸ்களை தொடங்க இருப்பதாகவும் பின்னர் அதை சோஹ்னா வரை நீட்டிக்க இருப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் ஸ்கை பஸ்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!