அமெரிக்கா விசாவை பெற வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!

1
அமெரிக்கா விசாவை பெற வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!
அமெரிக்கா விசாவை பெற வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!
அமெரிக்கா விசாவை பெற வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!

கொரோனா காலத்திற்கு பிறகு பல வழிமுறைகள் மற்றும் விஷயங்கள் மாறியுள்ளது. அதில், முக்கியமான ஒன்றை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க விசா:

அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் கனவாக உள்ளது. காரணம், அங்குள்ள வாழ்கை முறையும், பணிக்கான ஊதியமும் தான். அமெரிக்கா செல்வதற்கான வழிமுறைகளில் முக்கியமானது அமெரிக்க விசாவை பெறுவது. இது பல காலமாக ஒரு நீண்ட செயல்முறையாக தான் உள்ளது. இந்த விசாவை பெறுவதற்கு பலரும் மிகவும் ஆர்வமாக தயாராகி வருவதை பார்த்திருப்போம்.

இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்க விசாவிற்கான காத்திருப்பு காலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது. அதாவது, இப்போது விண்ணப்பிக்கத் திட்டமிடுபவர்கள் மார்ச்-ஏப்ரல் 2024க்கான விசா பெறுவதற்கான விசா இண்டர்வியூவ் தேதிகளை பெறலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இதற்காக காத்திருக்க வேண்டும். அமெரிக்க மட்டுமல்லாமல், இதேபோல்,ஷெங்கன் ஸ்டேட்ஸ், கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் இது போன்று தான் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் திட்டத்தில் வறுமை கோட்டின் தரம் மாற்றம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அமெரிக்க விசாவிற்காக விண்ணப்பிக்கும் போது காத்திருப்பு காலம் மாறுபடுகிறது. அதன்படி, கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவிற்கு விசிட்டர் விசா பெற வேண்டும் என்றால் 587 நாள் காத்திருக்க வேண்டும். இதுவே டெல்லியில் 581 நாள், சென்னையில் 557 நாள், ஹைதராபாத் 518 நாள், மும்பை 517 நாள் ஆக உள்ளது. அதேநேரத்தில், சிலருக்கு 10 நாளில் 10 வருடத்திற்கான எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வருவதற்கான விசா அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!