ரேஷன் திட்டத்தில் வறுமை கோட்டின் தரம் மாற்றம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

0
ரேஷன் திட்டத்தில் வறுமை கோட்டின் தரம் மாற்றம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
ரேஷன் திட்டத்தில் வறுமை கோட்டின் தரம் மாற்றம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
ரேஷன் திட்டத்தில் வறுமை கோட்டின் தரம் மாற்றம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் தரத்தில் மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரேஷன் கார்டு தரம்

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகளை தவறான வழியில் பயன்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டது. அத்துடன் ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு இடங்களில் ரேஷன் பொருட்களை பெற்று அதனை கள்ள சந்தைகளில் அதிக லாபத்தில் விற்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முதற்கட்ட நடவடிக்கையாக தகுதியில்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வசதி படைத்தவர்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இல்லாதவர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பதால் அரசின் அனைத்து நலத்திட்டத்தின் சலுகைகளை பெறுகின்றனர். இதனால் தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுமென்று ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை – வானிலை அறிக்கை!

Exams Daily Mobile App Download

இதையடுத்து வறுமைக் கோட்டின் தரத்தை அரசு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு வறுமைக்கோடு தொடர்பான புதிய பட்டியல் வெளியிடப்படும். இந்த புதிய தரநிலைகளின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் முழுவதுமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டு குறித்த நிலை பற்றி இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here