கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!

0
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் - இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் - இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!

கூகுள் நிறுவனம் பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய வசதியை ரத்து செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

கூகுள் நிறுவனம்

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. மேலும் இதன் தயாரிப்புகள் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிகளவில் பயன்பாட்டுக்கு வராததால் கூகுள் நிறுவனம் ஆனது சில சேவைகளை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Google Translate வசதியை நிறுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சீனாவில் Google Translate வசதியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அண்மை காலமாக சீனாவிற்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் கூகுள் தனது சர்ச் என்ஜினை கடந்த 2010ம் ஆண்டு சீனாவிலிருந்து விலக்கி கொண்டது. இதையடுத்து கூகுள் தனது சேவைகளில் சிலவற்றையும் நிறுத்த ஆரம்பித்தது. இதில் குறிப்பாக Gmail, Google Maps உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதற்கான முயற்சியை கையில் எடுத்தது.

ஏர்டெல் பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை!!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் Google Translate வசதி சீனாவில் குறைந்த அளவே பயன்படுத்தி வருவதால் இதனை ரத்து செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதல் இதன் சேவைகள் கிடைக்கவில்லை என சீன சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியது. அத்துடன் Google Translate சேவையை பெற VPN வைத்திருந்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலைக்கு சீன பயனாளிகள் தள்ளப்பட்டார்கள். இதையடுத்து தற்போது Google Chrome-ல் உள்ளமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு அம்சமான Google Translate இனி சீனாவில் செயல்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!