WhatsApp பயனர்களுக்கு ஷாக் தகவல் – இனி 16 லட்சம் பேர் பயன்படுத்த முடியாது!

0
WhatsApp பயனர்களுக்கு ஷாக் தகவல் - இனி 16 லட்சம் பேர் பயன்படுத்த முடியாது!
WhatsApp பயனர்களுக்கு ஷாக் தகவல் - இனி 16 லட்சம் பேர் பயன்படுத்த முடியாது!
WhatsApp பயனர்களுக்கு ஷாக் தகவல் – இனி 16 லட்சம் பேர் பயன்படுத்த முடியாது!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது. பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் கணக்குகளுக்கு தடை:

உலகளவில் வாட்ஸ்அப் செயலியை அதிகளவு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இதன்மூலம், குரல் அழைப்பு, வீடியோ அழைப்புடன் முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகளைப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். பிற மெசேஜிங் ஆப்ஸுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருப்பதே, பயனர்கள் அதிகம் விரும்புவதற்கான காரணம் ஆகும்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் விதிகளை மீறியதாக 16 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் தற்போது அதன் 11வது மாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. வாட்ஸ்ஆப் தளத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணங்களுக்காக இந்தக் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் பேசியது,” என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சேவைகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் உள்ளது.

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

மேலும் கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு, பிற மெய்நிகர் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக தரவு ஆய்வாளர்கள், நிபுணர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். இந்த செயல்பாடுகளின் மூலமாக மட்டுமே தளத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏப்ரல் 2022 அறிக்கையை ஐடி விதி 2021 இன் கீழ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பயனர் பாதுகாப்பு அறிக்கையானது, வாட்ஸ்ஆப் பயனர்களின் புகார்கள் மற்றும் நிறுவனம் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை விவரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!