“குக் வித் கோமாளி” சிவாங்கிக்கு எப்போது திருமணம்? அவரே சொன்ன தகவல்!
விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஷிவாங்கி, அவருக்கு எப்போது கல்யாணம் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் லைவில் பதில் சொல்லி உள்ளார்.
பாடகி சிவாங்கி:
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஷிவாங்கி. பெரிய பாடகர் குடும்பத்தில் இருந்து வந்த அவர். பாடகியாக புகழ்பெற்றாரோ இல்லையோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தனது வெள்ளந்தி மனது மூலமாக அதிக ரசிகர்களை கவர்ந்தவர். அதன் மூலமாக அவருக்கு பெரியவர் முதல் சிறியவர் வரை ரசிகர் பட்டாளம் அதிகம். மேலும் இன்ஸ்ட்டாவில் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிக பாலோவர்ஸ் கொண்டவர் என்று பெருமையும் இவருக்கு வந்தது.
விஜய் டிவி ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஜோடி – ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்தது. மேலும் படங்களில் காதாபாத்திரமாக நடித்தும், பாடல்களையும் பாடி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுடன் காதல் அலை வீசியதில் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக மாறினார். மேலும் புகழ் சிவாங்கியின் அண்ணன் தங்கை பாச விடீயோக்களும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
TN Job “FB
Group” Join Now
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது ரசிகர்களுடன் லைவில் பேசி வருகிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் வந்த அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், இன்னும் அதற்கு 8 வருஷங்கள் இருக்கு, 8 வருஷங்களுக்கு பின்னரே கல்யாணம் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.