கோவையில் கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!
கொரோனா 3ம் அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதால் கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ஜி.எஸ். சமீரன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா 3ம் அலை:
கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து 3ம் அலை பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து இது கொரோனா 3ம் அலையாக இருக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் குழந்தைகளுக்கு என 1699 படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தயார்படுத்தி உள்ளது என கலெக்டர் ஜி.எஸ். சமீரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆக்சி மீட்டர் அவசியம், CEO சுற்றறிக்கை!
கொரோனா 3ம் அலை முன்னெச்சரிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 7 ஆயிரத்து 183, ஆக்ஸிஜன் படுக்கைகள் 4 ஆயிரத்து 526, தீவிர சிகிச்சை படுக்கைகள் 646 என மொத்தம் 12 ஆயிரத்து 355 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண படுக்கைகள் 573, ஆக்ஸிஜன் படுக்கைகள் 959, தீவிர சிகிச்சை படுக்கைகள் 167 என மொத்தம் 1699 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் 14 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு என 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 114 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் மக்களை கண்காணிக்க 14 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்திற்குள் வரும் கேரள மக்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்று அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.