தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆக்சி மீட்டர் அவசியம், CEO சுற்றறிக்கை!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை முழுமையாக குறையாத நிலையில் மாணவர்கள் நலனில் அதிக கவனம் தேவை என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பல்கலை மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி பள்ளிகள் திறப்பதற்குள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளிலும் மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கற்றலில் ஈடுபட வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
கட்டிடங்களில் மேற்கூரைகள் சுத்தம் செய்தல் வேண்டும். மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். பள்ளி நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் ஆக்சி மீட்டர் பள்ளிகளில் இருக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.