மத்திய பல்கலை மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்பட12 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் செப்டம்பர் 2 ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நுழைவுத்தேர்வு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதாலும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பல்வேறு சிரமங்களை மேற்கொள்வதால் பள்ளிகள் செப்டம்பர் முதல் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான பொதுநுழைவுத் தோ்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது.
WhatsApp பண பரிமாற்ற சேவையில் புதிய அம்சம் – பேமண்ட் பேக்ரவுண்ட் அறிமுகம்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்பட12 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தோ்வு செப்டம்பர் 15, 16, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மணி நேரம் நடைபெறும் தேர்வில் தவறான பதில்களுக்கு 0.05 மதிப்பெண்கள் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் விருப்பமான மற்றும் தங்களுக்கு ஏற்ற படிப்பினை தேர்வு செய்து செப்டம்பர் 2ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலம் அறியலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைனில் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.