கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானை விவாகரத்து செய்துள்ளதாக அவரது மனைவி ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். விவாகரத்து குறித்த நீண்ட விளக்கம் ஒன்றினையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஷிகர் தவான் – ஆயிஷா:

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தான், ஷிகர் தவான். இவருக்கும் இவரது கைதேர்ந்த பேட்டிங்கிற்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிக் பாக்ஸிங் வீராங்கனையான ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வளர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர், கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது முதல் கணவரை பிரிந்த ஆயிஷா ஷிகர் தாவானை திருமணம் செய்து கொண்டார்.

T20 World Cup 2021 – இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!

தவான் மற்றும் ஆயிஷா இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆயிஷா தற்போது தான் ஷிகர் தவானை விவாகரத்து செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் விவாகரத்து பற்றிய ஒரு நீண்ட விளக்கத்தினையும் தனது மனக்குமுறலையும் பதிவிட்டுள்ளார். ‘விவாகரத்து என்பது தன்னை பொறுத்தவரையில் ஒரு கெட்ட வார்த்தை என்றும், அதனை நான் எனது வாழ்வில் மீண்டும் ஒரு முறை பயன்படுத்துவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு “XUV700 ஜாவெலின்” பரிசு – மஹிந்திரா நிறுவனத்தின் அறிவிப்பு!

ஷிகர் தவான் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். அதற்கான பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அவர் கூடுதலாக உலக கோப்பைக்காகவும் பயிற்சி எடுத்து வருகிறார். அவரது மனைவி ஆயிஷா கூறியதற்கு அவரது தரப்பில் இருந்து எந்த வித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!