T20 World Cup 2021 – இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!

0
T20 World Cup 2021 - இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!
T20 World Cup 2021 - இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!
T20 World Cup 2021 – இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!

வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கவுள்ள T 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் விவரம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வைத்து வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் T 20 உலக கோப்பை தொடரும் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு “XUV700 ஜாவெலின்” பரிசு – மஹிந்திரா நிறுவனத்தின் அறிவிப்பு!

அதாவது IPL போட்டிகள் முடிவடையும் 2 நாட்களில் உலக கோப்பை தொடரும் ஆரம்பிக்கிறது. இந்த போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வைத்து நடத்த இந்திய கிரிக்கெட் கவுன்சில் (BCCI) முடிவு செய்துள்ளது. உலக கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் விவரங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால் இந்திய அணி வீரர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், விராட் கோலி தலைமையில் 18 முதல் 20 வீரர்கள் அடங்கிய குழுவாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, IPL போட்டிகளில் முத்திரை பதித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் இங்கிலாந்து தொடரில் கலக்கி வரும் ஷர்தூல் தாகூர் ஆகியோருக்கு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதே போல தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அல்லது மற்றொரு வீரர் சேட்டன் சக்காரியாவுக்கு இடம் கிடைக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காயம் காரணமாக IPL போட்டிகளில் இருந்து விலகிய தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!

இந்நிலையில் T 20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு முடிந்துள்ளதாகவும், அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரங்களை BCCI செயலர் ஜெய் ஷா விரைவில் அறிவிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் முடிவடைவதற்கு முன்பாக T 20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!