2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு “XUV700 ஜாவெலின்” பரிசு – மஹிந்திரா நிறுவனத்தின் அறிவிப்பு!

0
2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு
2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு "XUV700 ஜாவெலின்" பரிசு - மஹிந்திரா நிருவனத்தின் அறிவிப்பு!
2020 ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு “XUV700 ஜாவெலின்” பரிசு – மஹிந்திரா நிறுவனத்தின் அறிவிப்பு!

நடப்பாண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற வீர்ரகளுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் “XUV700 ஜாவெலின்” காரை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

சிறப்பு பரிசு:

சமீப காலகட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மஹிந்திரா நிறுவனம் பல சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்ற பிறகு மகேந்திரா நிறுவனம் தனது தார் எஸ்யூவியை கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ், சுப்மான் கில், டி நடராஜன், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பரிசளித்தது. இதே போல், தற்போது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மெட்ரோ நியோ ரயில் திட்டம் சாத்தியக்கூறுகள் ஆய்வு – மத்திய அரசிடம் கோரிக்கை!

அதன்படி, ஒலிம்பிக் 2020 மற்றும் பாராலிம்பிக்ஸ் 2020 ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு புதிய XUV700 ஜாவெலின் வாகனத்தை பரிசாக வழங்க இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இந்த புதிய வாகனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆட்டோ மற்றும் ஃபார்ம் டெபார்ட்மெட்டின் தலைமை வடிவமைப்பு அதிகாரி பிரதாப் போஸ் வடிவமைக்க உள்ளார். இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா ‘ஜாவெலின்’ என்ற பெயரை வாகன வர்த்தகத்தில் முத்திரை பதித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஸ்பெஷல் வெர்ஷனான XUV700 ல் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஏதும் வெளியிடவில்லை. பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் கார்களில், வீரர்களின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப உட்புறங்கள் திருத்தி அமைக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் வெர்ஷனின் முதல் வாகனம் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பரிசாக வழங்கப்படும் எனவும் நிறுவனம் முன்னதாக அறிவித்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!