பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் ஷர்மிளா, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் ஷர்மிளா, மகிழ்ச்சியில் சௌந்தர்யா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் ஷர்மிளா, மகிழ்ச்சியில் சௌந்தர்யா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் ஷர்மிளா, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா பிளான் போட்டு கொண்டிருக்கிறார். மேலும், தற்போது சௌந்தர்யாவுடன் சேர்ந்து எப்படி பாரதியுடன் கண்ணம்மாவை சேர்த்து வைக்கலாம் என பிளான் போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் ஒன்றாக சேரப் போகிறார்களோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை பாரதி என்ன தான் வெறுத்து ஒதுக்கினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டே தான் இருக்கின்றனர்.

ஜெகாவிடம் பணம் கேட்ட மூர்த்தி, கடன் வாங்கியது தெரிந்து வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

தற்போது சௌந்தர்யாவின் நண்பனான விக்ரம் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு சமூக சேவைகள் செய்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். பாரதிக்கும் சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருப்பதை அறிந்து விக்ரம் அதிர்ச்சியடைகிறார். மேலும், விக்ரம் பாரதியுடன் சேர்ந்து சமூக சேவைகள் செய்ய வேண்டும் என விரும்புகிறார். பின்பு, விக்ரம் அவரது மருத்துவமனையிலேயே பாரதியை தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்த்து கொள்கிறார். கண்ணம்மாவும் விக்ரம் மருத்துவமனையில் அட்மின் ஆபீசராக சேர்ந்துள்ளார். கண்ணம்மாவும் நம்முடன் தான் பணியாற்ற போகிறாரா என்பதை அறிந்துகொண்டு கடுப்பாகிறார் பாரதி.

ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!

சௌந்தர்யா தான் கண்ணம்மாவையும் இந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டிருப்பார் என பாரதி சௌந்தர்யாவிடம் சண்டை போடுகிறார். பின்பு அந்த மருத்துவமனைக்கு வெண்பாவும் வெண்பாவின் அம்மாவான ஷர்மிளாவும் வருகிறார்கள். இவள் ஏன் இங்கு வருகிறார் என வெண்பாவை பார்த்ததும் சௌந்தர்யாவிற்கு கோவம் வருகிறது. பின்பு, ஷர்மிளா சௌந்தர்யாவிடம் நான் கண்டிப்பாக பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கிறேன் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!