ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழ் சின்னத்திரை நடிகர்களாக மக்கள் மனதில் இடம் பிடித்து திருமணம் செய்து கொண்ட ஷபானா, ஆர்யன் ஜோடி தற்போது பாண்டிசேரிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆர்யனின் பிறந்தநாளை முன்னிட்டு ஷபானா கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஆர்யன் – ஷபானா:

ஜீ தமிழ் தொலைக்காட்சி செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ஷபானா. அவரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆர்யன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவியது. இந்நிலையில் ஷாபனாவின் பிறந்தநாள் அன்று இருவருக்கும் நிச்சயம் முடிந்ததாக மோதிரம் அணிந்த புகைப்படத்தை ஷபானா பதிவிட்டிருந்தார்.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சித்து, ஸ்ரேயாவிற்கு நாளை திருமணம் – வெளியான மெகந்தி நிகழ்ச்சி வீடியோ!

இருவரும் எந்த முன்னறிவிப்பும் வெளியிடாமல் கடந்த 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன் ஷபானா மணப்பெண் கோலத்தில் தந்து இன்ஸ்டாவில் தனது ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின் இருவரும் நடிகை ரேஷ்மா மதன் திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் ரேஷ்மா கழுத்தில் தாலி கட்டும் போது ஷபானா கண்ணீரில் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் நாடியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

திருமணம் முடிந்த கையோடு ஷபானா ஆர்யன் ஜோடி ஹனிமூனிற்கு பாண்டிசேரியில் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கே எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆரியனிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் கடற்கரையில் சர்ப்ரைஸ் பார்ட்டி ஒன்றை ஷபானா ஏற்பாடு செய்துள்ளார். கொட்டும் மழையில் ஆர்யன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். மேலும் வெடி வெடித்து சர்ப்ரைஸ் செய்ய ஆர்யன் நெகிழ்ந்து போனார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!